உண்மை இல்லம் அறக்கட்டளை
தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ குடியினால் பிரச்சனையா?
இருதய நோய், புற்று நோய், சர்க்கரை நோய் போன்று கட்டுப்படுத்த முடியாத குடி ஒரு நோய், அது குடும்ப நோய், குடிப்பவரையும் பாதிக்கும் குடும்பத்தில் உள்ள மற்ற உறவுகளையும் பாதிக்கிறது. இக்குடி நோயை நோயாக நினைக்காமல் பலர் இந்நோயை அடையாளம் கண்டு கொள்ள தவறுவதாலும், மறுப்பதலும் தொடர்ந்து துன்பம் அடைகிறார்கள்.
முற்றிலும் சேவை மனப்பான்மையுடன், உங்களுக்கு சேவை செய்வதற்காகவே காத்திருக்கிறோம்!!
உங்கள் அன்புக்குரியவரின் மது பழக்கத்தினை கையாள்வதில் உங்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் , ஆதரவையும், அறிவுரையையும் காண நீங்கள் ஒரு இடத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காவே உண்மை இல்லம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
*வறண்ட குடியற்ற* *நிலை*
அமைதியின்மை மற்றும் எரிச்சல்
திருப்தியின்மை
உறவு முறையில் சிக்கல்கள்
உணர்ச்சிகள் எல்லை மீறுவது
மகிழ்ச்சியின்றி வாழ்வது
சுயநலம்
இரட்டை வேடம் மற்றும் பயம்
தன்னை சுற்றித்தான் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம்.
